வெள்ளி, 28 டிசம்பர், 2012

அய்யோ ரேப்பு....!


புது டெல்லியில் நடந்தது மட்டும் தான் கற்பழிப்பா..?

 

இந்தியா கற்பழிப்புக் குற்றங்களில் அமெரிக்காவிற்கும் , தென் ஆப்பிரிக்கா விற்கும் அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. மக்களே நமது நாட்டில் நடக்கும் கற்பழிப்புகளில் எவ்வளவு காவல் நிலையங்களுக்கு சென்றன என்பது பற்றி உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மற்ற இரண்டு நாடுகளில் அப்படி அல்ல. இப்போது சொல்லுங்கள் முதலிடமா.. மூன்றாமிடமா ...???

கொலையை விட பெண் பித்து தான் நமது சமூகத்தால் மிகவும் கீழ்த்தரமான , அருவருக்கத்தக்க குற்றமாகக் கருதப்படுகிறது. ஆயினும் எப்படி இருக்கிறோம் என்பதனைப் பாருங்கள்.

சரி, புது டெல்லியில் நடக்கும் போராட்டங்களின் கோரிக்கைகள் என்னென்ன..? எவரிடமாவது இந்தக் கேவலத்தை தடுத்து நிறுத்தும் ஆயுதம் இருக்கிறதா..? இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி விட்டால் கற்பழிப்புகள் குறைந்து விடுமா..?

 

பொது இடத்தில் தூக்கிலிட சொல்கிறார்கள் சிலர்...

ஆண்மை நரம்புகளை அறுக்க சொல்கிறார்கள் சிலர்....

 

குற்றம் செய்தவனுக்கு இவைகளை செய்துவிடலாம் , தவறேதும் இல்லை.

நியாயமும் கூட.

ஆனால் , இந்த தண்டனைகள் குற்றம் செய்யத் தயாராகும் ஒருவன் மனதில் தோன்றி அவனைத் தடுத்துவிடும் என்று நாம் நினைத்தால் , நாம் முட்டாள்கள் தான்.

குடித்தால் சாவு விரைவில் வரும் , அதுவும் கள்ளச்சாராயம் குடித்தால் உடனே வரும் என்பதை அறிந்து நம் குடிமக்கள் குடிக்காமல் கிடந்தார்களா என்ன..?

இதை விட இந்த தண்டனைகள் ஒன்றும் பெரியவை அல்ல . ஏனெனில் யாருக்கும் தெரியாமல் மூடிமறைத்து விட்டால் தப்பிவிடலாம் என்றுதான் எண்ணுவார்கள். கள்ளச்சாராயம் போல் இதைச் செய்தவுடன் சாவு என்பது இல்லையே.. ? மேலும் இது போன்ற வெறி வரும்போது , மனித மிருகங்களுக்கு வேறு எதுவுமே மண்டைக்கு வராது. முன்மூளை(frontal lobe) தூங்கி விடும் . செய்த பின் சிலர் மிகவும் வருந்துவர். அப்போதுதான் தண்டனைகள் பற்றிய எண்ணங்கள் எல்லாம் வரும். அனால் நடந்தது நடந்தது தானே...?

இவர்களை விடுங்கள் , இந்த நபரால் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பெண்ணின் நிலையை நினையுங்கள்..? குற்றம் செதவனின் நரம்புகளை அறுத்து விட்டால்

அந்தப் பெண் அகமகிழ்ந்து போய் விடுவாளா..? அவனுக்கு தண்டனை , இந்த பெண்ணுக்கு எதிர்காலம்  வெறுமை...!

 

இன்னும் சிலர் ,

போலீசார் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று கூச்சலிடுகிறார்கள்....

ஒரு காவலரை அடித்தே கொன்று விட்டார்கள்...

 

இந்தியாவை விட அமெரிக்க காவல் துறை சிறப்பாக செயல் படுவதாக நாம் நினைக்கிறோம். ஓரளவு உண்மையும் கூட. அவர்களிடம் நிறைய தொழில் நுட்பங்கள் இருக்கின்றன..

911 என்ற எண்ணுக்கு அழைத்தால் சில நிமிடங்களில் வந்துவிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அனால் புள்ளிவிவரப்படி அங்கே நம் நாட்டைவிட இது அதிகம் நடக்கிறது.

இதற்கு என்ன பதில்..?

இந்த குற்றம் பெரும்பாலும் , முதல் முறை குற்றம் செய்பவர்களால் தான் , அதிகம் நிகழ்த்தப்படுகிறது.. எனும்போது இதை தடுப்பதில் காவலர்களின் பங்கு என்பது ஒன்றுமே அல்ல .. அல்லவா..?

 

குற்றம் நடந்த பிறகு , புலனாய்வு செய்வதிலும் , தண்டனை பெற்றுத்தருவதிலும் அவர்களின் பங்கு மிகப் பெரியது.

ஆனால் இதையும் நமது காவல்துறை சரிவர செய்வது இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அதிலும் குற்ற்றவாளி செல்வாக்கு படைத்தவராக இருந்தால் , கற்பழிக்கப்பட்டவரை கேள்விகளால் மீண்டும் பல முறை கற்பழித்து தற்கொலை செய்ய வைத்து விடுவார்கள்.

இது ஒரு புறம் இருக்க .. ஒரு பேச்சுக்கு , காவல் துறை மிக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கூட.. இந்த குற்ற்றத்தை தடுப்பது என்பது பெரும்பாலான நேர்வுகளில் முடியாது என்றே கருதுகிறேன்.

 

பல நாடுகளில் வேறு ஒரு தீர்வு முன் வைக்கப்படுகிறது. நானும் அது சரியான தீர்வு என்றே கருதினேன் . பிறகு அதுவும் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து விட்டேன்.

அத்தீர்வு என்னவெனில்..? பாலியல் தொழிலை அங்கீகாரம் செய்து நெறிப்படுத்துவது...!

இதனால் பலன் குறைவு என்பதை , கனடா போன்ற பாலியல் தொழிலை அங்கீகாரம் செய்த நாடுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

25 சதம் மட்டுமே ஆரம்பத்தில் இக்குற்றம் குறைந்ததாகவும் , பின்னர் பெரிய மாற்றம் இல்லை என்று தெரிகிறது.

நமது நாட்டில் இதை அங்கீகரிப்பதில் பெரிய சிக்கல்கள் உள்ளன.

குடும்பங்கள் சிதையும், சிறுமிகள் தவறான வயது சான்றிதழ் பெறப்பட்டு இத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் அபாயமும் உண்டு. இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.

சரி தீர்வுதான் என்ன..?

என்றாவது ஒரு நாள் இவை மாற வேண்டும் என்பதுதான் நம் விருப்பம் , என்றாலும் , இன்றைய நிலையையே கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் .


அதனால் ,  நாம் நம்மை பாதுகாத்து கொள்வதுதான் தீர்வு எனக் கொள்ள வேண்டி உள்ளது.

நமது வாழ்விடம், ஊர் , அதன் மக்கள் , அவ்வூரின் ஆண்கள் , அவர்களின் பாலியல் பழக்க வழக்கங்கள் , விருப்பங்கள் இவைகளைப்பற்றி நம்மை தவிர வேறு யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவைகளை அறியாவிட்டாலும் அறிந்து கொள்ள வேண்டும்.

அறிந்த பின்பு , எந்த நேரத்தில் எங்கு செல்லலாம் , எங்கு செல்லக்கூடாது, பொது இடங்களில் எவ்வாறு உடை அணிய வேண்டும்,  நமது ஊர் ஆண்களிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பவைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒரு ஜோடி காதலர்கள் தன்னந்தனியாக ஒரு இடத்தில் சில மென் பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அவர்களை கூட்டமாக வரும் ஆண்கள் எவ்வாறு பார்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். அப்படி இருக்கக் கூடாதுதான். ஆனால் அப்படித்தானே இருக்கிறது.

 

நாட்டில் நாகரிகமும் கல்வியறிவும் கூடிக்கொண்டே சென்றாலும்.. வக்கிரமும் கூடிக்கொண்டேதான் செல்கிறது.

 

“Please tell your son not to stare at us”  என்பது போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தார்கள் சிலர் . அவர்கள் நிதர்சனம் அறியாதவர்களா? அல்லது அறியாததுபோல் பேசுகிறார்களா என்று எனக்கு புலப்படவில்லை. இன்றைய கால கட்டத்தில் எவனுக்கும் 30 வயதுக்குள் திருமணமே சாத்தியமில்லாதது போல் தெரிகிறது...

இதில் எங்கே முறைக்காமல் இருப்பது..? பசிக்காதவனுக்கு கூட நல்ல உணவின் நறுமணம் பசியை ஏற்படுத்திவிடும், பட்டினி கிடப்பவர்களுக்கு..?

சுய கட்டுப்பாடு பற்றி நாம் எல்லோரும் அறிவோம்.. நொறுக்கு தீனியைக் கூட நிறுத்த முடியாத அளவுக்குதான் நமது மக்களின் சுயகட்டுபாட்டின் லட்சணம்...!!!


 



கவனமாக இருப்போம்.

நமது மகிழ்ச்சியை காத்துக் கொள்வோம்.

நன்றி.